போதையில் தாறுமாறாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது தாக்குதல்

 
s s

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் தனியார் பேருந்து ஓட்டுனர் போதையில் பேருந்தை இயக்கியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே பொதுமக்கள் தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் நோக்கி தனியார் பேருந்தை பயணிகளுடன் ஓட்டுனர் சரவணன் இயக்கி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து லையத்திலிருந்து புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் ரயில்வே கேட் நோக்கி அப்பேருந்து சென்ற போது பேருந்து தாறுமாறாக சாலையில் ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது திருவப்பூர் ரயில்வே கேட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சாலை ஓரமாக ஓட்டி சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

இதனையடுத்து காயமடைந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் சரவணன் என்பவரை விசாரித்தபோது ஓட்டுநர் சரவணன் நிலை கொள்ள போதையில் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. தனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் சரவணனை சரிமாறியாக தாக்கினர். அவருக்கு ஆதரவாக வந்த நடத்துனர் பிரகாசுக்கும் தர்ம அடி விழுந்தது. இதனால் திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. இதனிடையே அந்த தனியார் பேருந்து உரிமையாளர் நேரில் வந்தால் தான் பேருந்தை இயக்க விடுவோம் எனக் கூறி பொதுமக்கள்  பேருந்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.