மேட்டூர் அணை அருகே காவிரி ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

 
மேட்டூர் அணை அருகே காவிரி ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம் மேட்டூர் அணை அருகே காவிரி ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

மேட்டூர் அணையின் அடிவாரம் மட்டம் சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயமடைந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் பட்டியந்தல் பகுதியில் இருந்து நேற்று 47 ஐயப்பன் பக்தர்கள் ஏற்றி சென்ற பேருந்து இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையின் அடிவாரம் பகுதிக்கு வந்தது. இந்த பேருந்தை தருமபுரி பகுதியை சேர்ந்த ஒட்டுனர் வேலு ஒட்டி வந்தார். காவிரி ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக மட்டம் சாலையில் பேருந்து சென்ற போது 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை கண்ட பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேட்டூர் காவிரியில் புனித நீர் அடைவதற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் மட்டம் சாலையை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். 

நகராட்சிக்கு சொந்தமான இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க கோரி பலமுறை பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரிந்த சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர் சம்பவம் குறித்து மேட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்