திடீரென உடைந்து விழுந்த பேருந்தின் படிக்கட்டு- 3 மாணவர்கள் காயம்

 
ச் ச்

மதுரை திருமங்கலம் பகுதியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்ட 37B என்ற அரசு மகளிர் இலவச பேருந்து, திருமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்தது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்ட 37B அரசு மகளிர் இலவச பேருந்து திருமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணித்த 3 மாணாக்கர்கள் கீழே விழுந்த நிலையில் நல்வாய்ப்பாக காயம் நின்று தப்பினர். இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் பயணித்த மாணாக்கர்கள் மற்றும் பெண்கள் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இலவசமாக இயக்கப்பட்டு வரும் மகளிர் பேருந்துகள் தரமற்ற முறையில் இயக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 

இந்நிலையில் மதுரை திருமங்கலம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் பேருந்து படிக்கட்டு கீழே விழுந்து ஏற்பட்ட விபத்து பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் போக்குவரத்துதுறை அதிகாரிகள் இலவச மகளிர் பேருந்துகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவியர்களை அழைத்துச் செல்லக்கூடிய பேருந்துகள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படும் போது விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு போன்று விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பேருந்து பராமரிப்பு விவகாரத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.