நடிகர் விஜய் பிறந்த நாள் - புஸ்ஸி ஆனந்த் கோவிலில் சிறப்பு வழிபாடு

 
Bussi anand

நடிகர் விஜய்-யின் 49வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.

தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் பலரும் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இணையதளங்கள், சமூக வலைதளங்களில் விஜய் குறித்த தகவல்கள், போஸ்டர்கள், அவரது படம் குறித்த அப்டேட்டுகளே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் நடிகர் விஜயின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜயின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நடிகர் விஜய்-யின் 49வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள புத்திராங்கன்னி அம்மன் கோவிலில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த சிறப்பு வழிபாட்டில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.