#BREAKING புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்ததையடுத்து, இருவரும் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் முன் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. சென்னை, சேலம், ஈரோடு என 3 மாவட்டங்களில் ஆனந்தை கைது செய்ய தனிபடை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைந்துள்ளன.
இந்நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்ஜாமின் கேட்ட மனுக்களை கடும் கண்டனங்களுடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.


