மே-2ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..

 
stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம்  கடந்த ஜன.9-ம் தேதி தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.13 வரை நடைபெற்றது.  அத்துடன், பேரவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும்  2023-24-ம் நிதி ஆண்டுக்கான   பட்ஜெட் கூட்டத்தொடர்  கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கியது.  அதன்படி மார்ச் 20ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டையும்,  21ம் தேதி  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது.   

மே-2ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..

பிறகு, மார்ச் 29-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது.  மொத்தம் 21 நாட்கள் நடைபெற்ற   பேரவை அலுவல்கள் நேற்றுடன் நிறைவுபெற்றன.  இதனைத் தொடர்ந்து, மீண்டும் சட்டப்பேரவை  கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் மே 2 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் பட்ஜெட்டில் வெளியான திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று  கூறப்படுகிறது.