டிசம்பர் 1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்வு!

 
ttn

வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விரும்பிய சேனல்களுக்கும் மாறும்முறை என்பது அறிமுகமானது இந்த புதிய முறையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம் . இதில் சேனல் நிறுவனங்கள் தங்கள் சேனல்களுக்கான கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.19 என நிர்ணயித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் தொகுப்பு சேனல்கள் அனைத்திற்கும் 19 ரூபாய் என்ற அதிகபட்ச கட்டணத்தையே நிர்ணயித்து வருகிறது. 

ttn

இந்த சூழலில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் ஜனவரியில் வெளியிடப்பட்டது.  இதில் ஒரு சேனலில் அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயிலிருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை கண்டுகளிக்க முடியும். இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு சேனல் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஆனால் குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு தனி கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சேனல் நிறுவனத்தின் தொகுப்பு சேனல்களின் கட்டணம் 40 லிருந்து 69 ஆக உயர்கிறது. 

ttn

இதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.  இதனால் மாத கேபிள் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.  தற்போது அரசு கேபிள் கட்டணம் 130 ரூபாய் மற்றும்  ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.