5 பேர் உள்ளே புகுந்து அசம்பாவித்தை ஏற்படுத்தி விட முடியுமா?- செந்தில் பாலாஜி

 
செந்தில்பாலாஜி செந்தில்பாலாஜி

கரூரில் 5 பேர் உள்ளே புகுந்து அசம்பாவித்தை ஏற்படுத்தி விட முடியுமா? என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மின் விநியோகம் பிற்பகலுக்குள் இயல்பு நிலை திரும்பும் செந்தில் பாலாஜி பேச்சு

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “விஜய் கூட்டத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை, தவெக கேட்ட இடம் தான் வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் காலதாமதமாக நடந்த‌துதான் அசம்பாவித‌த்திற்கு காரணம். கூட்டத்தை கணித்து அவர்கள் தான் இடத்தை தேர்வு செய்திருக்க வேண்டும். வேலை முடித்து செல்வபவர்களும் வேடிக்கை பார்க்க அங்கே கூடிவிட்டனர். பெரும் கூட்டத்தில் 5 பேர் உள்ளே புகுந்து அசம்பாவித்தை ஏற்படுத்தி விட முடியுமா? விஷமிகள் கூட்டத்தில் இருந்தால் தெரிந்திருக்கும்.

ஜெனரேட்டர் ஆப் செய்த போது, தெருவிளக்கு எரிந்துகொண்டு இருந்த‌து. கூட்டம் அதிகரித்த‌தால், அவர்களே ஜெனரேட்டரை ஆப் செய்தனர். ஜெனரேட்டர் ரூமுக்குள் வெளியாட்கள் சென்று ஆப் செய்ய முடியுமா?வழக்கமாக தலைவர்கள் தொண்டர்கள் பார்க்கும் வகையில் அமர்ந்திருப்பார்கள். விஜய் முன்சீட்டில் இருந்தால் அவரை பார்த்துவிட்டு கூட்டம் கலைந்திருக்கும்.விஜய் வாகனத்தின் உள்ளே இருந்த‌தால் அவரை பார்க்க முயன்றனர். லைட்டை ஆப் செய்துவிட்டு விஜய் ஏன் உள்ளே இருந்தார்? லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் 7 ஆயிரம் பேர் மட்டுமே நிற்கமுடியும். உழவர் சந்தை பகுதியில் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே நிற்க முடியும். தனியார் இடத்தை கேட்டு பெற்று திமுக முப்பெரும் விழா நடத்தினோம். திமுக முப்பெரும் விழாவில் கட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த‌து. கரூர் சம்பவத்தை அரசியலாக பார்க்க வேண்டாம். 3 இடங்களில் வேலுச்சாமிபுரத்தில் தான் அதிக மக்கள் கூட முடியும்"” எனக் கேள்வி எழுப்பினார்.