தேர்தல் பத்திரம் ரத்து - முதலமைச்சர் வரவேற்பு

 
stalin

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

supreme court

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.  அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது  என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


 


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், #ElectoralBonds அரசியலமைப்பிற்கு முரணானது என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் # ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது. அமைப்பின் மீது சாமானியர்களின் நம்பிக்கையையும் இது உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.