மாடித்தோட்டத்தில் கஞ்சா செடி! 65 வயது முதியவர் கைது..!

 
1 1

சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பது தொடர்பாகவும், வீட்டு தோட்டங்களில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக வளர்ப்பது தொடர்பாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக தேனியில் 65 வயது முதியவர் மாடி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாடி தோட்டம் என்பது பிரசித்தி பெற்ற தொழிலாகும். பலர் இதனை பகுதி நேரமாகவும் சிலர் முழு நேரமாகவும் செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் தேனி மாவட்டம் கோம்பை துரைசாமிபுரத்தில் மாடியில் சாக்கு பைகளில் 12 கஞ்சா செடிகளை வளர்த்து,  வந்த 65 வயதுடைய நாகூர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.