தவெக மாநாட்டுக்கு சென்ற கார் விபத்து- 2 பேர் உயிரிழப்பு
Oct 27, 2024, 13:50 IST1730017246000
திருச்சியில் இருந்து வந்த தவெக மாநாட்டுக்கு சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

திருச்சியில் இருந்து வந்த தவெக தொண்டர்களின் கார் உசேன் பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் திருச்சி தெற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் கலை என்பவர் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.


