சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி தீ பிடித்த கார்- ஓட்டுநர் பலி

 
ச் ச்

திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் தடுப்புச் சுவர் மீது மோதி கார் தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு காரை ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது நாகப்பட்டினம்  பைபாஸ் சாலை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கார் தூக்கி வீசப்பட்டது. இந்த நிலையில் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் முழுவதுமாக கார் எரிந்து சாம்பலானது. மேலும் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் முழுவதுமாக எரிந்து உடல் கருகிய நிலையில் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் காவல்துறையினருக்கு தெரியவில்லை இது சம்பந்தமாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.