சிறுவன் ஓட்டி வந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்

 
ச் ச்

சென்னையில் தாறுமாறாக 18 வயது இளைஞன் ஓட்டி வந்த கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். 

சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பாலம் நோக்கி தாறுமாறாக சென்று கொண்டிருந்த Ford எண்டோவர் சொகுசு கார் பேசின் ,மேம்பாலம் முடியும் இடத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. உடனடியாக சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காரில் சிக்கி இருந்த ஐந்து பேரை வெளியில் பத்திரமாக மீட்டனர். உடனடியாக போக்குவரத்து போலீசார், காருக்குள் இருந்து மீட்கப்பட்ட  ஐந்து பேரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.


இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயது நிரம்பிய சிறுவன் நகுல் தனது நண்பர்களுடன் ஓட்டி வந்த கார் என தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய காரை ஜேசிபி உதவியுடன் போக்குவரத்து புலனாய்வு போலீச மீட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை தினங்கள் முடிந்து பரபரப்பான காலை நேரத்தில் பேசின் மேம்பாலம் அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது