பாலத்தில் சிக்கிய கார்! கூகுளை நம்பி சென்றதால் விபரீதம்

 
கார் கார்

குளித்தலை பேருந்து நிலையம் அருகே தென்கரை பாசன வாய்க்காலின் நடைபாலத்தை கடக்க முயன்ற ஹூண்டாய் i10 காரின் 2 சக்கரம் பாலத்தின் விளிம்பில் அந்தரத்தில் தொங்கியது.

கரூர் மாவட்டம்,குளித்தலை பேருந்து நிலையம் அருகே தென்கரை பாசன வாய்க்கால் சிறு பாலத்தில் வந்த காரை திருச்சி மாவட்டம்,சமயபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மணப்பாறையில் உள்ள அவரது உறவினர்கள் இல்ல நிகழ்ச்சிக்காக செல்வதற்கு வழி தெரியாமல் சிறு பாலம் வழியாக மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்று உள்ளார். தென்கரை பாசன வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலையில் காரில் அந்தரத்தில் தொங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிரேன் உதவியின் மூலம் கார் பாலத்தின் விளிம்பிலிருந்து தூக்கி மீட்கப்பட்டது

மேலும் அப்பாலம் வழியாக தனியார் பள்ளி,தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்,கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது அவ்வழியாக தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். அந்த பாலம் சேதம் அடைந்தும்,தடுப்பு சுவர் இல்லாமல் பல வருடங்களாக இருந்து வருகிறது பாலத்தை மேம்படுத்திட தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.