சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு கடந்த 2023ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ஜெயலலிதா மறைந்த போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனை பெரிய மனதோடு வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்பாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதை அடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்தது.