#JustIn கனிமொழியின் வெற்றி செல்லும் - உச்சநீதிமன்றம்

 
Kanimozhi

திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

kanimozhi

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் தனது கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை என்றும் அதனால் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேட்பு மனுவில் வருமானம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது. அதை மறைத்து கனிமொழி வெற்றி பெற்றுள்ளார் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சாந்தகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .ஆனால் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

supreme court

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரி  கனிமொழி தொடர்ந்த மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம். இதன் மூலம் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் என  எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.