சவுக்கு சங்கர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு
மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் புகாரில் சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசியதாக தமிழக முன்னேற்றப்பட நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் Redpix youtube சேனல் ஆகியோர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 155/ 2024 பிரிவு 294b, 506 (1) ஐபிசி சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மாநகர குற்ற பிரிவில் அளித்த புகார் அடிப்படையில் பெண் பத்திரிகையாளர் குறித்து *கோலமாவு சந்தியா* என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 154/ 24 பிரிவு 294b, , 354 d , 506(1), 509 IPC மற்றும் பிரிவு 4 TNPHW சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்படுகிறது.