மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு எதிராக திருச்சூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூர் பூரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அதிகாலை 3 மணிக்கு சுரேஷ் கோபி திருச்சூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருந்துள்ளார். அப்போது பூரம் நடக்கும் இடத்திற்கு நோயாளிகளை மட்டும் அழைத்து வர பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வேனில் வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதியப்பட்டுள்ள வழக்கு அடிப்படையில் ஆறு மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும்
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சிபிஐ கட்சியினுடைய தலைவர் சுமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சூர் மாவட்ட போலீசாரும் மோட்டார் வாகன அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐபிசி 279 /34 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுபோல் மோட்டார் வாகன சட்டத்தின் படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


