சீமானுக்கு கொலை மிரட்டல்- தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சியினர் புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) லெப்ட் பாண்டி. சமூக வலைதளத்தில் நடிகர் விஜய் க்கு ஆதரவாக அடிக்கடி வீடியோக்களை லெப்ட் பாண்டி வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் ஜெயகுமார் என்பவர் தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வீடியோ விளியிட்டதாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இரண்டு பிரிவுகளில் தேனி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


