விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு

 
விஜய் விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் மாநாட்டு நடைமேடையிலிருந்து ரசிகரை தூக்கி வீசிய புவுன்சர்கள் 10 பேர் மீதும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

vijay

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்டபெரியம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரானஇவர் கடந்த வாரம்மதுரையில் நடைபெற்ற தவெக மநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது ஆர்வத்தில் அவர் விஜயின் ரேம்வாக்கில் நெருங்க முயன்றபோது விஜயின் பாதுகாவலர்கள்அவரை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சரத்குமாரின் தாய் சந்தோசம் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சரத்குமார் தனது தாய் கூறுவது பொய் என்று பேசிய வீடியோ வலைதளங்களில் பரவியதால் குழப்பம் நிலவியது. இந்நிலையில்  நேற்று சரக்குமார் தனது

தாயாருடன் வந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மறு ஒன்றை அளித்திருந்தார் அதில், நடிகர்விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் .  புகாரை ஏற்ற மாவட்ட காவல்துறை உத்தரவிட்டதின் பேரில் குன்னம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மற்றும் பெயர் தெரியாத பவுன்சர்கள் 10 பேர் மீதும  296(B) திட்டுவது, 115 ( 2 ) தாக்குவது, 182(2) வேகமாக தள்ளி விடுவது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். த.வெ. க தலைவர் விஜய் மீது வழக்கு பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.