குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சை கருத்து - மத்திய இணை அமைச்சர் மீது வழக்குப் பதிவு

 
raju

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், எர்ணாகுளம் களமச்சேரி என்ற இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது மூன்று வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய டொமினிக் மார்ட்டின் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் குண்டுவைத்ததாக மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளார்.

bomb blast

இந்த நிலையில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை, சமூக வலைதளத்தில் ராஜூ சந்திரசேகர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.