பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இயங்குவதாக புகார் கூறிய ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

 
Highcourt

முரசொலி நிலம் குறித்து பேசியதற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ramadoss

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறிக்கட்டளையின் அலுவலகம்  அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறி, பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.எஸ் பாரதி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரியும் டாக்டர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில்  இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி, ராமதாசுக்கு எதிராக தொடரபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.