கிறிஸ்தவர்களை மிரட்டி குங்குமம் பூசிய நயினார் நாகேந்திரன் உதவியாளர் மீது வழக்குப்பதிவு

 
s s

நெல்லையில் ஜெபம் செய்ய சென்றவர்களை தடுத்த இந்து அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் கீழக்களூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22 ஆம் தேதி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் மகாதேவன் பாஜகவை சேர்ந்த அன்புராஜ் உட்பட மூன்று பேர் வழிமறித்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அனுமதி இல்லாமல் நுழைந்து மத பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்படுகிறீர்கள் எனக் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஆலங்குளத்தைச் சேர்ந்த டேவிட் நிர்மல்துரை என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக 22 ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


அந்த புகாரில்ம் கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்யும் ஊழியராக நான் இருக்கிறேன். பட்டக் கல்லூரி சேர்ந்த சிவபாக்கியம் அழைப்பின் பேரில் கீழக்கலூரில் உடல் நலம் குன்றிய அவரது உறவினருக்காக ஜெபம் செய்ய சென்றபோது மூன்று பேர் எங்களை வழி மறித்து மிரட்டினர். வலுக்கட்டாயமாக நெற்றியில் குங்குமம் பூசி மத உணர்வுகளை புண்படுத்தினர் என புகாரில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மணிகண்டன் மகாதேவன், அங்கு ராஜ் மற்றும் அவர்களது சகோதரரான சங்கர் ஆகிய மூன்று பேர் மீதும் மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல் உட்பட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு ராஜ் என்பவர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. .....