மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு
Mar 20, 2024, 14:45 IST1710926101000
மத்திய இணை அமைச்சர் சோபா பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களை காரணம் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

அத்துடன் இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மற்றும் பாஜக மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.



