டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

 
காவேரி மேலாண்மை ஆணையம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. 

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.  இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.

காவேரி

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. நாளை நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.  காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடதக்கது.