கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சேலத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

 
Kodanadu

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான 5 தனிப்படைகள், சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 300க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசுக்கு மாற்ற டிஜிபி உத்தரவிட்டார். இதனால் தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அப்போதைய நீலிகிரி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பாவிற்கு சம்மன் வழங்கி சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதனை தொடர்ந்து கோடாநாடு மேலாளர் உட்பட சுமார் 48 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  விபத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.