சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின
May 13, 2025, 13:58 IST1747124923947
மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
சற்று நேரத்திற்கு முன்பு சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின. சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 88.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்சி பிளஸ் 2 பொது தேர்வை மொத்தம் 16,92,794 மாணவர்கள் எழுதிய நிலையில், அதில் 14,96,307 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 0.41 சதவீத மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் 24.12 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில், 93.60% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.


