“பலாத்காரத்துக்கு முன் கொலை செய்தோம்”- கோவை பாலியல் குற்றவாளிகள் பகீர் தகவல்!

 
ச் ச்

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன் கொலை செய்தது போலிசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான 3 பேர் குறித்து வெளியான  அதிர்ச்சி தகவல்! : Coimbatore Student Sexual Abuse Shocking Information  Released About 3 Arrested - kumudamnews.com


கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2 ம் தேதி, இரவு காரில் காதலனுடன் பேசி கொண்டு இருந்த, கல்லூரி மாணவியை சிவகங்கை சேர்ந்த அண்ணன், தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ் (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் ( 28) மற்றும் இவர்கள் உறவினரான தவசி என்ற குணா ஆகியோர் இருட்டான பகுதிக்கு கடந்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். சமூக விரோத செயலில் ஈடுபட்ட இவர்கள் நவம்பர் 3 ம் தேதி கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கணறு பகுதியில் தப்பி ஓட முயன்ற போது காலில் துப்பாக்கியால் சுட்டு தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குணம் அடைந்த நிலையில் மூன்று பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதை அடுத்து அந்த 3 குற்றவாளிகளும் சிறையில் இருந்த நிலையில் கடந்த மாதம் 1 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், போலீஸ் காவலில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி காலையில் சேரப்பாளையம் அருகே நடந்த தேவராஜ் வயது (55) என்பவரை இவர்கள் அடித்து கொலை செய்து உள்ள தகவலும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குரும்பபாளையம் அருகே உள்ள மேல கவுண்டன்புதுரை சேர்ந்த தேவராஜ்  சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கணவரை காணவில்லை என்று கோவை, கோவில்ப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்து இருந்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடிய போது தேவராஜ் தலையில் பலத்த காயங்களுடன் சேரப்பாளையம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இடைத்தொடர்ந்து இந்த வழக்கை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தேவராஜை மாணவியின் புகாரைத் தொடர்ந்து, கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 3 பெரும் தான் தேவராஜை அடித்து கொன்றது தற்போது தெரியவந்து உள்ளது. நவம்பர் 2 தேதி காலையில், 3 பேரும் சேரப்பாளையம் காட்டுப் பகுதியில், நீண்ட நேரம் மது அருந்திக் கொண்டு அமர்ந்து உள்ளனர். அப்போது தேவராஜ் அவர்களை பார்த்து உள்ளார். ஆட்டு வியாபாரம் செய்து வந்த தேவராஜ் அவர்களை ஏன் ? இங்கு நீண்ட நேரம் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மயக்கம் அடைந்து விழுந்த அவர் யாரும் பார்க்காததால் இறந்து விட்டார். அதன் பிறகு அங்கு இருந்து இரவில் கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகருக்கு வந்து அவர்கள், இருட்டான பகுதியில் 3 பேரும் மீண்டும் மது அருந்தி உள்ளனர். 

கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு|Coimbatore gang rape case

அப்போது தன் அன்று இரவு அந்தப் பகுதியில் இருட்டான இடத்தில் காரை நிறுத்திக் கொண்டு கல்லூரி மாணவி அவரது காதலனுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்து உள்ளார். கார் நீண்ட நேரம் நிற்பதை பார்த்து அருகில் சென்ற 3 பேரும் உள்ளே இருந்த அவர்களை வெளியில் வரக் கூறி அரிவாளால் கண்ணாடியை உடைத்து உள்ளனர். அப்போது கல்லூரி மாணவியை அவர்கள் கடத்திச் செல்ல முயன்ற போது தடுத்த அவரது காதலனை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தன. இதைதொடர்ந்து இந்த தகவல் கோவை மாவட்ட போலீசாருக்கு, கோவை மாநகர போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தேவராஜ் கொலை வழக்கில் 3 பேரையும் கோவில்பாளையம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி கோவை மாவட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர். மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் அன்றைய தினமே இரவு கொலை செய்துவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ள சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.