பாஜக தேசிய செயலாளர் பதவியிலிருந்து சி.டி. ரவி நீக்கம்.

 
CT Ravi

தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளாராக உள்ள சி.டி. ரவி , பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து  அக்கட்சி மேலிடம் நீக்கியுள்ளது.  

தேசிய அளவிலான பாஜக நிர்வாகிகள் குழு மாற்றி அமைக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . மாற்றம் செய்யப்பட்ட  13 துணை தலைவர்கள், 9 பொதுச்செயலாளர்கள் கொண்ட புதிய  பட்டியலை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா  வெளியிட்டுள்ளார். இதில் பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து சி.டி.ரவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த அணில் ஆண்டனி,  தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பாஜக தேசிய செயலாளர் பதவியிலிருந்து சி.டி. ரவி நீக்கம்.

ஏற்கனவே பொதுச் செயலாளராக  இருந்த சி.டி.ரவி  , திலிப் சாஹியா , ராதா மோகன், திலீப் கோஷ், ஹரிஷ் திவேதி, சுனில் தியோதர், வினோத் சோங்கர் ஆகியோரது தேசிய பொறுப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் ரவி தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் பாஜக மாற்றம் செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.