செல்போன்கள் ஹேக் செய்யப்படக்கூடும் - சைபர் கிரைம் போலீசார்

 
s

இலவச திரைப்படங்கள் வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை தவிர்க்க வேண்டும். அங்கீகாரமற்ற செயலிகள்  மூலம் தரவுகள் திருடப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Image


இலவச திரைப்படங்களை வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம் செல்போன்கள் ஹேக் செய்யப்படலாம். இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துவதால், உங்கள் போனில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு சைபர் குற்றவாளிகள் "டிஜிட்டல் கைது" போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அங்கீகாரமற்ற செயலிகளை பயன்படு்த்துவதால் தொலைபேசியில் சேமிக்கப்படும் தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது. 

பாதுகாப்பு டிப்ஸ்:

  • டெலிகிராம் அல்லது மூன்றாம் தரப்பு இணையதளங்களில் இருந்து செயலிகளைத் தரவிறக்கம் செய்யாதீர்கள்.
  • போன் செட்டிங்சில் 'INSTALL UNKNOWN APPS'அனுமதியை வழங்காதீர்கள்.
  • சந்தேகத்திற்கிடமான பாப்-அப் விளம்பரங்களைக் கிளிக் செய்யாதீர்கள்.
  • அதிகாரப்பூர்வமான ஓடிடி (OTT) தளங்களை மட்டும் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம்.