மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார் - நிர்மலா சீதாராமன் கேள்வி

 
nirmala sitharaman

மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு இருந்தார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இடு தொடர்பாக செய்தியாளர்களை சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார். டெல்லியில் இருந்த போது போகிற போக்கில் பிரதமரை சந்தித்தார். முதல்வர்  பேரிடர் நடக்கும் போது கூட முதல்வர் டெல்லியில் இருந்தது ஏன். தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது.  மாநில பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு  எடுக்கும். மழை முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்று கூற வேண்டாம்.

2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இவ்வளவு மழை பெய்யும் என யாரும் சரியாக கணித்து கூற முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், வானிலை மையத்தை குற்றம் சாட்டுவது ஏன்?. மழை எச்சரிக்கையின் அடிப்படையில் எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை.
மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் தாமதமாகவே சென்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு முன் தமிழ்நாடு அதிகாரிகள் யாரும் மீட்புப் பணியில் இல்லை. இவ்வாறு கூறினார்.