இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலேயே தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி

 
அகதிகள் அகதிகள்

உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 2, 2025 அன்று வெளியிட்ட Immigration and Foreigners (Exemption) Order, 2025 மூலம், 2015க்கு முன் வந்த இலங்கைத் தமிழ் அகதிகள் சட்டப்பூர்வமாக தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை தமிழர்கள்

2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சரியான பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பினும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் தண்டனை விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.