மானிய விலையில் தக்காளி வழங்க மத்திய அரசு முடிவு!

 
tomato

தக்காளி விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மானிய விலையில் தக்காளி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது.  விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இருப்பினும் நியாய விலைக்கடைகள் மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில்  குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.  ஆனாலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மாற்றமின்றி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. 

tomato

இந்நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மானிய விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மானிய விலையில் தக்காளி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.