"கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

 
EPS

தமிழ்நாடு அரசு கேட்ட நிதி இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதற்கு முன்பாக பலப்புயல்கள் வந்துள்ளன. எந்த அரசு புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது கூட குறைத்து தான் கொடுப்பார்கள்.  மத்திய அரசு கேட்ட நிதியை கொடுத்ததே கிடையாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக மத்தியில் அங்கம் வகித்த காலங்களிலும் புயலால் தமிழகம்  பாதிக்கப்பட்டது.  அப்போதும் திமுக கேட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை . தற்காலிக நிவாரணம் மற்றும் நிரந்தர நிவாரணம் என இரண்டு வகைகள் உள்ளது . இரண்டு அடிப்படையில் மாநில அரசு , மத்திய அரசிடம் நிதியை கேட்கும் தற்காலிகமாக நிவாரணமாக  என்டிஆர்எப்  விதியை எடுத்து எந்தெந்த நிவாரணத்திற்கு வேண்டுமோ அதற்கு செலவழிக்கலாம் . நிரந்தர நிவாரணமாக என்டிஆர்எப் நிதியின் கீழ் விதிமுறைகளில் வந்தால் விதி வழங்குவார்கள் இல்லாவிட்டால் வழங்க மாட்டார்கள்.  திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. 

eps

தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுகவை பொறுத்தவரை அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க முடியாத சூழல் இருந்தது.  இருப்பினும் ஜனநாயக கடமையை தமிழக மக்கள் ஆட்சி உள்ளனர்.  அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை தூர் வாரப்பட்டது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அது கிடப்பில் போடப்பட்டது மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். வண்டல் மண் அதிகமாக தேங்கியுள்ளது.  மேட்டூர் அணைதூர்வாரப்பட்டால் கூடுதலாக தண்ணீர் தேங்கி வைக்க முடியும்.

EPS

தமிழ்நாட்டில் போதை பொருட்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை.  திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம் திமுகவாகவே மாறிவிட்டது. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவிலேயே இணைந்து விட்டது போன்று உள்ளனர். நாட்டின் நடைபெறும் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் அரசியல் கவனத்திற்கு எடுத்து வைக்க வேண்டும். நல்ல எதிர்கட்சி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தால்தான் அரசு கவனமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தும்.   திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் திமுகவில் இணைந்து விட்டதால் திமுகவை எதிர்த்து பேச மறுக்கிறார்கள் என்றார்.