புது வகை ரூ.500 கள்ள நோட்டு - எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

 
சென்னையில் கட்டுக்கட்டாக ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல்- இருவர் கைது சென்னையில் கட்டுக்கட்டாக ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல்- இருவர் கைது

புது வகை ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரையில் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இந்திய ரிசர்வ் பேங்க் அச்சிட்டு வெளியிடுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டும் ரூபாய் நோட்டுகளை போன்று சிலர் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றன. இது தொடர்பாக பல வழக்கிகளில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டில் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.