"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் உயரும் கொரோனா" : தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!

 
central

கொரோனாவிலிருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பிரிட்டன், அமெரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று   வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் வைரசை தடுக்கும் பொருட்டு,  வெளிநாடுகளில் இருந்து வருபவர் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

corona

இந்த சூழலில்  ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்  கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநிலங்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளை விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

corona update

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விமான நிலையங்களில் சோதனைகள் நடைபெறவேண்டும்,  ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்,  ஒமிக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டது என்பதால் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

corona virus

அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை வேலூர், திருவள்ளூர், சென்னையில் கொரோனா  உயர்ந்துள்ளதால் போதிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது வாரத்தை விட கடைசி வாரத்தில் மூன்று மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,  பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.