மத்திய சிறையில் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் - அண்ணாமலை

 
Annamalai Annamalai

ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று பொன்முடி தண்டனை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ponmudi

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், "மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். 



திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு  @mkstalin அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது " என்று குறிப்பிட்டுள்ளார்.