இந்த புத்தாண்டு வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக மலரட்டும் - எல்.முருகன் வாழ்த்து

 
L Murugan

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மலரட்டும் 2024- ஆங்கிலப் புத்தாண்டு, விலகட்டும் தமிழகத்தில் அரசியல் இருள், பிறக்கட்டும் தமிழ் மண்ணில் புத்தொளி, பரவட்டும் பிரதமர் மோடியின் எழுச்சி கனல், 2024-ம் ஆண்டு மலரும் இந்த இனிய நேரத்தில் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கட்டும். நம் பாரத பிரதமர் மோடி  ஜி அவர்களின் தலைமையில் பாரத தேசம் முழுவதும் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வளர்ச்சி பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் இந்த ஆண்டில் மற்றுமொறு புதிய உச்சத்தை தொடரட்டும்.


தமிழக மக்களுக்கு  கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்கி, வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக மலரட்டும் என இறைவனை பிராத்தித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.