பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் - எல்.முருகன்

 
L Murugan

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நினைவு தினமான இன்று, அவருடைய தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள். பாரதீய ஜன சங்கத் தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். முழு நேரப் பிரச்சாரகராக தன்னை இந்த தேசத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர், மக்களிடைய தேசிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தார். இராஷ்டிர தர்மா’ எனும் மாத இதழ் மற்றும் ‘சுதேசி’ எனும் நாளிதழ் தொடங்கி அதன் மூலம் சுதந்திர விழிப்புணர்வூட்டினார். 


கிராம சுய ஆட்சி, அனைத்து மக்களுக்குமான முன்னேற்றம் மற்றும் சுதேசி போன்ற கொள்கைகளை தீவிரமாக ஆதரித்தார். இன்றும் தேசத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களும், அரசாங்க மருத்துவமனைகளும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்பதே, அவர் தேசத்தின் நலனுக்காக உழைத்ததற்கான சாட்சியாகிறது. பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நினைவு தினமான இன்று, அவருடைய தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.