தமிழகத்திற்கு மார்ச் 10-ல் வருகிறது மத்திய பாதுகாப்புப் படை..!
Feb 24, 2026, 07:00 IST1771896650000
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 50 கம்பெனி படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
-
பாதுகாப்பு வருகை: முதற்கட்டமாக 50 கம்பெனி பாதுகாப்புப் படைகள் வரும் மார்ச் 10-ஆம் தேதி தமிழகம் வந்தடைகின்றன.
-
தேர்தல் தேதி எப்போது? துணைத் தேர்தல் ஆணையர்கள் தமிழகத்தில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்பியுள்ளதால், இன்னும் ஒருசில நாட்களில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
பரபரக்கும் பிரசாரம்: ஒருபுறம் தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டினாலும், மறுபுறம் அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

