"குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma subramanian

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரம் குறித்து இன்று விசாரணை தொடங்குகிறது என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொள்ள உள்ளது .

masu

குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் 2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

Masu

இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது , குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.  குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் வதந்திகளை பரப்புகிறார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது நல்லதல்ல" குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. உரிய விசாரணைக்குப் பின் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். குழந்தை இறந்துவிட்டதாக வதந்தி பரப்புவதை ஈபிஎஸ் நிறுத்த வேண்டும். குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.