எச்சரிக்கை மக்களே! இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு!
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
08.04.2024: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

09.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.04.2024 மற்றும் 11.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இந்நிலையில் இன்றும், நாளையும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் 4.5 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.


