இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
rain

நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது . இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து,  ஆந்திர கடல் பகுதிக்கும் , வட தமிழக கடல் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும்.

anthiyur rain

இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும், தர்மபுரி ,ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

rain

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி ,கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.  வருகிற 14-ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

rain

வருகிற 15-ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ,  ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை மூன்று இடங்களிலும் , மிக கனமழை 23  இடங்களிலும்  பதிவானது. 

rain

இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.