அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்க்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் கரணமாக இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்க்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.