தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.