அடுத்த 3 மணி நேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain

அடுத்த 3 மணி நேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் , நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.10.2023 மற்றும் 11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.