4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

 
rain rain

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழைக்கு  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 3-4 தினங்களில் துவங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது. 

Rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.