தமிழ்நாட்டில் மதியம் 1 மணிவரை 9 மாவட்டங்களில் மழை!!

 
rain

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

karur rain

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.