இந்த மாவட்டத்தில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

 
rain

அடுத்த 3 மணிநேரத்தில்  நாகையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 18ஆம் தேதி வரை  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

rainஇந்நிலையில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.