காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

 
rain

அடுத்த 3 மணி நேரத்தில் 3 ,மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

 மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tn

இந்நிலையில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.